Monday, April 7, 2014

இன்னுமோர் உலகம்….

இன்றும்


உண்டு களித்து

உறங்கி விழித்து

கொண்டிருக்கிறது

இன்னுமோர் உலகம்….



எங்கோ தூரத்தில்

அபலைப் பெண்ணின்

அழுகுரல்

காதில் நாராசமாய்

ஒலிக்கிறது…..



அது

காவல் நிலையமோ

கன்னிச் சாவடியோ

கணவன் வீடோ

எதுவாயும் இருக்கலாம்…..



ஏதோ ஓரிடத்தில்

இளைய சக்தி

இணைய சகதிக்குள்

புரண்டுருண்டு

புழுவாய் நெளிந்து

கொண்டிருக்கிறது…..



அது

முகநூலோ

டிவிட்டரோ

யூ ட்யுபோ

எப்படியும் இருக்கலாம்…..



நிதமும் ஒரு தருணத்தில்

சாலையின் சந்தடியில்

உயிர் துடித்திருக்க

சண்டித்தனம் செய்து

வண்டிகள் நகர

மறுத்து நிற்கின்றன…..



அது

பட்டபகலோ

நட்டநடு நிசியோ

பாதி நாளோ

எந்நேரமும் இருக்கலாம்….



எப்போதும்

என் பார்வையில்

அன்றே உலகம்

அழிந்துவிடுமென்பது போல்

அவசர கதியில்லேயே

பறந்துகொண்டிக்கிறான்

மனிதன்….



அவன்

பாமரனோ,

படித்தவனோ

பரதேசியோ

பணக்காரனோ

எவனாயும் இருக்கலாம்….



காலத்தின் தொண்டையில் சிக்கிய

ஏதோவொரு நிமிடத்தில்

தேவையின்றி

தூக்கி எறியப்படும் உணவோ

கேள்வியின்றி

கிழித்தெறியப்படும் தாளோ

ஆதரவின்றி

வெட்டிஎறியப்படும் மரமோ

அவசியமின்றி

வாரியிரைக்கப்படும் நீரோ

ஏளனமாய் சிரித்த வண்ணமுள்ளது…..



எது

எப்படி ஆயினும்

யார்

எப்படி போயினும்

இன்றும்

உண்டு களித்து

உறங்கி விழித்து

கொண்டுதானிருக்கிறது

இன்னுமோர் உலகம்….

Tuesday, June 7, 2011

பதிவுலக நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் ஓர் அண்பான வேண்டுகோள்...


பெட்ரோல் விலையேற்றம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.இதை நம்மால் கட்டுபடுத்த முடியவில்லை. ஊருலகில் எது எதற்கோ போராட்டம் உண்ணாவிரதம் இருக்கும் பலர் பெட்ரோல் விலையேற்றம் குறித்து கவலை படுவது போல் தெரிவதில்லை.


பெட்ரோல் விலை உயர்வது போல் டீஸல் விலை ஏன் உயர்வதில்லை ? டீஸல் விலை ஏற்ற படும் என்று பேச்சு எழுந்தாலே போராட்டம் என்று கோதாவில் இறங்குகின்றனர் இந்தியா முழுவதும் உள்ள லாரி ஒட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர். இதற்காகவே டீஸல் விலை அவ்வளவு சீக்கிரமாக உயர்த்தபடுவதில்லை.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் 17 ரூபாய்க்கும், மலேசியாவில் 18 ரூபாய்க்கும் கிடைக்கும் பெட்ரோல் ஏன் இந்தியாவில் மட்டும் 67 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்க்கு நம் அரசு சொல்லும் காரணம் "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு." ஆனால் காரணம் அதுவல்ல. பெட்ரோல் விலை உயர்வு பெட்ரோலிய நிறுவனம் கைகளிலே தான் இருக்கிறது.



சரி, இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் பெட்ரோலில் தரம் இருக்கிறதா? கொடுக்கும் பணத்திற்கு சரியான அளவு கிடைக்கிறதா? இல்லை.

நண்பர்களே, பெட்ரோல் விலை உயர்வு இதோடு நிற்க போவதில்லை. நாளை, நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, மருந்துகள் போன்றவற்றிற்கும் நாம் அதிக ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும்.

நான் சமிபத்தில் படித்த செய்திகள்:

1. பெட்ரோல் விலை உயர்வால் விமான டிக்கெட் விலை ஏற்றப்படும்
2. 30 ,௦௦௦ ரூபாய்க்கு கிடைத்த மினசாரத்தில் இயங்கும் வண்டிகள், பெட்ரோல் விலை ஏற்றத்தினால் 50 % மடங்கு விலை உயர வாய்ப்பு உள்ளது.

ஆகவே நண்பர்களே, நாம் போராட்டமோ அல்லது உண்ணாவிரதமோ கடைப்பிடிக்காமல் பெட்ரோல் விலையேற்றத்தை வீழ்ச்சி அடைய வைக்க ஒரு நல்ல வழி உள்ளது.

அதாவது ஒரு நாள், ஒரே ஒரு நாள் நாம் கூட்டாக நம் வாகனங்களுக்கு பெட்ரோல் போடாமல் இருந்தால் ஒவ்வொரு பெட்ரோலிய நிறுவங்களுக்கும் பேரிழப்பு ஏற்படும் (கோடி கணக்கில்) . இது போல் பத்து நாட்களுக்கு ஒரு முறை நாம் கூட்டாக நம் வாகனங்களுக்கு பெட்ரோல் போடாமல் இருந்தால் பெட்ரோல் விலையேற்றத்தை வீழ்ச்சி அடைய வைக்கலாம்.

ஒரு முறை செய்து பார்ப்போமே நண்பர்களே. மின்னஞ்சல் மூலம் பல நண்பர்கள் இந்த புது முயற்சியை பலருக்கு தெரிய படுத்துகிறார்கள். தமிழ் பதிவர்களான நாமும் இதை கடை பிடிப்போமே. ஒரு முறை செய்து பார்ப்போமே நண்பர்களே.

அவ்வாறாக தேர்ந்து எடுக்க பட்ட நாள் ஜூன் 14. இந்நாளில் நாமும் பெட்ரோல் வாங்காமல் இருப்போம் பிறரையும் வலியுறுத்துவோம் நண்பர்களே.



பின் குறிப்பு: nee-naan-ulagam ப்ளாக் ல் இருந்து கிடைத்த தகவல் நானும் இதை ஏற்று ஜூலை 14 அன்று பெட்ரோல் போடுவதாக இல்லை.....தங்களும் தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டுகிறேன்.

Friday, June 3, 2011

கணினி சொற்களும் அதற்கான அர்த்தம்...

நாம் அன்றாடம் பயன் படுத்தும் கணினியில் சில கணினி சொற்களுக்கு சரியான அர்த்தம் புரியாமல் பயன் படுத்துவது உண்டு, அப்படி தெரியாமல் பயன் படுத்தும் பொது குழப்பம் வரவும் வாய்ப்புகள் அதிகம் உண்டு, இப்படி இருக்க அந்த வாக்கியங்களின் அர்தங்களை புரிந்து கொண்டால் எதற்காக எந்த வாக்கியத்தை எப்படி பயன் படுத்த வேண்டும் என்பதை சுலபமாக அறியலாம், குழப்பமும் நீங்கி விடும் அப்படி சில வாக்கியங்கள் இங்கே உங்களுக்காக......

# .COM (Commercial)
# .ORG (Organization)
# .INFO (Informational)
# .TV (Television)
# .MOBI ( Mobile )
# .WS (Website)
# .ME (ME)
# .CO.UK ( United Kingdom )
# .TV (Television)
# .MOBI ( Mobile )
# .WS (Website)
# .ME (ME)
# .CO.UK ( United Kingdom )